1734327046 death 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரத்தினபுரியில் சோகம்: லொறி மோதி 11 வயது பாடசாலை மாணவி பலி!

Share

எலபாத்த காவல்துறை பிரிவிற்குட்பட்ட கானதோல பகுதியில் நேற்று (06) நண்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் 11 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கானதோல – இலுக்குதென்ன வீதியின் 79-ஆம் இலக்க ரப்பர் தோட்டத்திற்கு அருகில், மாணவி வீதியோரமாகச் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லொறி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவி அலகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய லொறியின் ஓட்டுநர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டதா என்பது குறித்து எலபாத்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
death body 1
இலங்கை

மெகசின் சிறைச்சாலையில் உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித்தகவல்கள்.

நேற்றைய தினம் இரவு, கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த கைதி...

Chemmani Mass Graves
இலங்கை

தினந்தோறும் கிடைக்கப்பெறும் என்புக்கூடுகள் – அதிகரிக்கும் பதற்றம்.

100 நாட்களாக, செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரையில் 507...

dengue
இலங்கை

தென் மாகாணத்தில் அதிகம் பதிவாகும் டெங்கு நோயாளிகள்.

இந்த ஆண்டில் இதுவரை 88,522 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது....

parlimen president 1
இலங்கை

சிறைச்சாலைகள் மற்றும் கைதிகள் தொடர்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், சிறைச்சாலைகளில் நிலவும் நிலைமை...