குணமடைந்து வீடு திரும்பியவர் சாவு!
பண்டாரவளை, கஹத்தேவெலயில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி பூரண குணமடைந்த ஒருவர் மூன்று நாள்களின் பின்னர் தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் 62 வயதுடைய முன்னாள் கிராம உத்தியோகத்தர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபர் பதுளை பொது வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் நேற்று காலை உயிரிழந்தார்.
இதேவேளை, பண்டாரவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் புதிய தொற்றாளர்கள் 59 பேர் நேற்று இனங்காணப்பட்டனர்.
Leave a comment