ஒட்சிசனுடன் இலங்கை நோக்கிப் பயணிக்கும் சக்தி!

mm 720x375 1

ஒட்சிசனுடன் இலங்கை நோக்கிப் பயணிக்கும் சக்தி!

இலங்கை கடற்படைக்கு சொந்தமான ‘சக்தி’ என்ற கப்பல் இந்தியாவிலிருந்து ஒட்சிசனுடன் இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து ஒட்சிசன் கொண்டுவருவதற்காக கடந்த 17ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திலிருந்து பயணத்தை தொடங்கிய “சக்தி” கப்பல் 18 ஆம் திகதி சென்னை துறைமுகத்தை சென்றடைந்தது.

இந்தக் கப்பல் இன்று அதிகாலை ஒட்சிசனுடன் இலங்கை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்துள்ளது என்று கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

Exit mobile version