1770043539 Biosystems Technology AL Exam Sri Lanka 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தர உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் செயன்முறைப் பரீட்சை பெப். 07 ஆரம்பம்: பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!

Share

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் (Biosystems Technology) பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை இந்தப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 74 பரீட்சை நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாடசாலை விண்ணப்பதாரர்கள் அதிபர்கள் ஊடாக அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். தனியார் விண்ணப்பதாரர்கள் இவர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் ஏற்கனவே தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தபால் மூலம் அனுமதிப்பத்திரங்கள் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், இன்று முதல் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாக அவற்றைத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...