அதிகரிக்கின்றது பாணின் விலை
பேக்கரி உற்பத்திப் பொருள்களின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளது என, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு கிலோகிராம் கேக்கின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அச் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
Leave a comment