நாடு முடக்கப்படாது – ஜனாதிபதி திட்டவட்டம்!!
நாடு எந்த நிலையிலும் முடக்கப்படாது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனாத் தொற்றை காரணம் காட்டி நாடு முடக்கப்படுமாயின் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும். அத்துடன் அன்றாடம் தொழில் செய்து வாழ்வோர் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.
நாடு முழுமையாக முடக்கப்படாவிடினும், மக்கள் பாதுகாப்பை கருத்தில்கொண்டு விதிக்கப்படும் தனிமைப்படுத்தல் தொடர்பான சட்டதிட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் இறுக்கமாக்கப்படும்.
தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் விரைவாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் என்று கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Leave a comment