af 2
செய்திகள்உலகம்

தரையிறக்கும் ‘கியர்’ பகுதியில் சிக்குண்ட ஆப்கானியர் சடலம்!

Share

தரையிறக்கும் ‘கியர்’ பகுதியில் சிக்குண்ட ஆப்கானியர் சடலம்!

  • விமானம் திசை திருப்பப்பட்டது.
  • தலிபான் சார்புப் பதிவுகளுக்கு முகநூல் நிர்வாகம் தடை!

காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்க மீட்பு விமானம் ஒன்றின் கீழே – தரையிறக்கும் கியர் (landing gear) பகுதியில் – சடலம் ஒன்று சிக்குண்டதால் அது அவசரமாக அயல் நாடு ஒன்றில் தரையிறக்கப்பட்டது. அமெரிக்க ஊடகங்கள் சில இத் தகவலை வெளியிட்டிருக்கின்றன.

‘கியரை’ இயக்க முடியாத நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தால் அது மூன்றாவது நாடு ஒன்றுக்கு
திசை திருப்பப்பட்டு அங்கு தரையிறக்கப் பட்டது என்ற தகவலை “வோஷிங்டன் போஸ்ட்” உறுதிப்படுத்தி உள்ளது. ஆனால் விமானத்தில் சடலம் சிக்குண் டமை எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்ற தகவல் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.

அமெரிக்க இராணுவத்தின் மிகப் பெரிய சி17 ரக (C-17 transport aircraft) போக்குவரத்து விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. அதே விமானத்தில் தொங்கிக்கொண்டு பயணித்தவர்கள் சிலர் விமானம் வானத்தில் கிளம்பிப் பறந்து கொண்டிருந்த சமயம் தரையில் வீழ்கின்ற காட்சிகள் ஏற்கனவே வெளியாகி
இருந்தன.

அவ்வாறு விமானத்தின் கீழ் பகுதியில் ஏறி ஒளிந்துகொண்டு பயணித்த ஒருவரது சிதைந்த உடல் பாகங்களே சக்கரங்களது ‘கியர்’ பகுதியில் காணப்பட்டன என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தப்பியோட முயற்சிக்கின்ற ஆப்கானியர்களால் காபூல் விமான நிலையத்தில் கடந்த மூன்று தினங்களாகப் பெரும் குழப்பம் நிலவி வருவது தெரிந்ததே.

இதேவேளை ஆப்கானிஸ்தானின் முன்னாள் அரசுப் படைகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையானவர்கள் விமானங்கள், ஹெலிக்கொப்ரர்கள் மூலம் அண்டை நாடுகளில் தரையிறங்கி உள்ளனர். நூற்றுக்கணக்கான ஆப்கான் படையினர் 22 விமானங்கள், 24 ஹெலிக்கொப்ரர்கள் மூலம் தனது நாட்டு எல்லைக்குள் பிரவேசித்துள்ளனர் என்று உஸ்பெகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. அவ்வாறு படையினருடன் சென்ற ஆப்கான் விமானம் ஒன்றை உஸ்பெகிஸ்தான் நாட்டு விமானம் ஒன்று வழிமறிக்க முற்பட்ட சமயம் அந்த விமானம் விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொறுங்கியுள்ளது.

தலிபான் அமைப்புக்குச் சார்பான பதிவுகள் தடைசெய்யப்படும் என்பதை முகநூல் நிர்வாகம் மீண்டும் நினைவுபடுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து முகநூலில் தலிபானின் பிரசாரப்பதிவுகளும் அவர்களுக்கு ஆதரவான இடுகைகளும் மிக வேகமாக அதிகரித்துள்ளன என்று கூறப்படுகிறது.

தலிபான் அமைப்பு ஏற்கனவே தனது பரப்புரைகளுக்கு சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்திவந்துள்ளது.
தலிபான் இயக்கம் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு. திடீரென அது ஆட்சி அதிகாரத்துக்கு வந்திருப்பது டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பல சவால்களை ஏற்படுத்தி உள்ளது.

முகநூல் நிறுவனத்தின் ஆப்கானுக்கான நிபுணர்கள், தலிபான்களுடன் தொடர்புடைய பதிவுகளைக் கண்காணித்து நீக்குவர் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...