அஜித் நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது.
துணிவு படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 9 அல்லது 10ஆம் தேதிக்குள் முடிந்துவிடும் என்றும் அதன்பின் படக்குழு சென்னை திரும்ப உள்ளதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது.
ஏற்கனவே துணிவு படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருப்பதால் இந்த படம் ஜனவரி மாதம் ரிலீஸ் செய்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இத் திரைப்படமும் பொங்கல் தினத்தில் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் போனிகபூர் இந்த படத்தின் ரிலீஸ் திகதியை இன்னும் ஒரு சில வாரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#ajith #Thunivu
Leave a comment