tamilni 55 scaled
சினிமாபொழுதுபோக்கு

தளபதி -னாலே சும்மா அதிருதுல்ல.! ஷூட்டிங் ஸ்பாட்டை முடக்கிய விஜய்யின் தீவிர ரசிகர்கள்!

Share

தளபதி -னாலே சும்மா அதிருதுல்ல.! ஷூட்டிங் ஸ்பாட்டை முடக்கிய விஜய்யின் தீவிர ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் வெற்றி நடை போட்டு வந்த நடிகர் விஜய், தற்போது அரசியலில் களம் இறங்கி இருப்பது யாவரும் அறிந்த ஒன்று.

தனது அரசியல் பயணத்தை தொடங்கிய விஜய், சினிமா துறையில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.

அதன்படி நடிகர் விஜயின் 68 ஆவது படமான GOAT திரைப்படத்துடன் சினிமா துறையில் இருந்து விலகி, அரசியலில் முழு நேரமாக ஈடுபடவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது பாண்டிச்சேரியில் நடக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை பார்ப்பதற்கு என பெருந்திரளான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு தரிசனம் வழங்கிய விஜய், அங்கிருந்த பஸ் ஒன்றின் மேல் ஏறி தனது ரசிகர்களுக்கு காட்சி வழங்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி ரசிகர்கள் வீசிய மாலையை எடுத்துப் போட்டுக் கொண்டு, அதனை மீண்டும் தனது ரசிகர்களுக்கே வீசி அவர்களை உற்சாகப்படுத்தி உள்ளார் நடிகர் விஜய்.

பாண்டிச்சேரியில் விஜய்யின் ரசிகர்கள் அவருக்கு வழங்கி வரும் ஆதரவையும், கோஷங்களையும் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
07 2
பொழுதுபோக்குசினிமா

திரையுலகினருக்கு மகிழ்ச்சிச் செய்தி: நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், கலைஞருமான பாரதிராஜா, நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள...

26
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: மம்முட்டி வில்லனா? கோலிவுட்டை அதிரவைக்கும் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரையில் தோன்றவுள்ள செய்தி...

cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....

12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...