நடிகர் விஜய்யின் சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் வனிதா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, விஜய் டிவியின் இன்னுமொரு ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடினார்.
தற்போது, சின்னத்திரை, வெள்ளித்திரை, சொந்த யூடியூப் சனல், பிஸினஸ் என படு பிஸியாக உள்ளார்.
இந்த நிலையில், தற்போது திரைப்படம் ஒன்றில் ஜட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார் வனிதா.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் ஐட்டம் பாடலுக்கு நடனமாட பொதுவாக தயங்கும் நிலையில், அண்மைக்காலமாக ஐட்டம் பாடல்களில் தோன்றி வருகின்றனர். குறிப்பாக சமந்தாவின் ‘ஊ சொல்றியா மாமா’ பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த நிலையில், தற்போது வனிதாவும் ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார். ‘காத்து’ என்ற திரைப்படத்தில் வனிதா ஆடிய ஐட்டம் பாடல் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
‘கலரு கோழிக்குஞ்சு’ என்று தொடங்கும் இந்த பாடலை கானா பாலா பாடியுள்ளார். இந்த பாடல் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள வனிதா, ‘இது தனது முதல் ஐட்டம் டான்ஸ் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
#Cinema
Leave a comment