அஜித் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் வலிமை.
இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த திரில்லர் திரைப்படத்தை, இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ‘பே வியூ ப்ரொஜெக்ட்ஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றன.
அண்மையில் படத்தின் பஸ்ட் லுக், சிங்கிள் ரக் எல்லாம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
தற்போது சமூக வலைதளங்களில் டீஸர் குறித்த பல தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த தகவல்களின் படி படத்தின் டீஸர் அடுத்த வாரத்தில் வெளியாக இருப்பதாக சினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Leave a comment