1796009 avatar
சினிமாபொழுதுபோக்கு

அவதார்-2 படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

Share

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் ‘அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்’ வரும் 16-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டிரைலரில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகளும், கற்பனை உலகமும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட மொத்தம் 160 மொழிகளில் உலகம் முழுவதும் அவதார்-2 திரைப்படம் வெளியாக உள்ளது.

தற்போது இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் உள்ளிட்ட படக்குழுவினர் பல்வேறு நாடுகளில் அவதார்-2 படத்திற்கான புரோமோஷன் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் அவதார்-2 படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படத்தின் நீளம் மொத்தம் 3 மணி நேரம் 12 நிமிடங்கள் 10 நொடிகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சிகளை பார்த்தவர்கள், பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் படத்தின் காட்சிகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அவதார்-2 மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...