2025-ன் டாப் 10 தமிழ் ட்ரெய்லர்கள்: 54 மில்லியன் பார்வைகளுடன் ‘கூலி’ முதலிடம்!

NTLRG 20251221151537002136

2025-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு ஒரு பிரம்மாண்டமான ஆண்டாக அமைந்துள்ளது. சூப்பர்ஸ்டார்கள் மற்றும் இளம் நட்சத்திரங்களின் படங்கள் யூடியூப் தளத்தில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளன. இந்த ஆண்டின் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 10 தமிழ் திரைப்பட டிரெய்லர்களின் பட்டியல் இதோ:

அந்தவகையில் 2025 ஆம் ஆண்டு யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட 10 தமிழ் திரைப்படங்களின் ட்ரெய்லர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதனடிப்படையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் 54 மில்லியன் பார்வையாளர்களை கடந்து முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவதாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான தக் லைஃப் திரைப்படம் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் 39 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மூன்றாவது இடத்திலுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து நான்காவது இடத்திலுள்ளது.

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான டிராகன் திரைப்படம் 26 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஐந்தாவது இடத்திலுள்ளது.

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான விடாமுயற்சி திரைப்படம் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஆறாவது இடத்திலுள்ளது.

தனுஷ் இயக்கி நடித்த படம் இட்லி கடை திரைப்படம் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஏழாவது இடத்திலுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘மதராஸி’ திரைப்படம் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து எட்டாவது இடத்திலுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான பைசன் காளமாடன் திரைப்படம் 17 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஒன்பதாவது இடத்திலுள்ளது.

துல்கர் சல்மான், ராணா டகுபதி நடித்த காந்தா திரைப்படம் 14 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பத்தாவது இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Exit mobile version