aaaaaaaaaaaa
பொழுதுபோக்குசினிமா

ஹிப்ஹாப் ஆதியின் ’சபதம்’

Share

ஹிப்ஹாப் ஆதியின் ’சபதம்’

பாடகர், இசையமைப்பாளர், இயக்குநர், நடிகர் என பல அவதாரம் எடுத்துள்ளவர் ஹிப்ஹாப் ஆதி.

2017-ம் ஆண்டு வெளியான ‘மீசைய முறுக்கு’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானது மட்டுமன்றி நடிகனாகவும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஹிப்ஹாப் ஆதி மீண்டும் இயக்கி நடித்துள்ள புதிய படம் ‘சிவக்குமாரின் சபதம்’. படத்துக்கு இவரே இசையமைத்தும் உள்ளார்.

இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக மாதுரி ஜெயின் நடித்துள்ளார். படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இப் படம் இம் மாதம் 30 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு. ‘மீசைய முறுக்கு’படத்தை தொடர்ந்து இத படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...