thalapathy
சினிமாபொழுதுபோக்கு

படக்குழுவினரை படம் பிடித்த தளபதி…. வைரலாகும் வீடியோ

Share

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தளபதி 67 படக்குழு படப்பிடிப்புக்காக தனி விமானத்தில் காஷ்மீருக்கு சென்றதாக கூறப்பட்டது. இதனிடையே தொடர் அப்டேட்டுகளை கொடுத்து படக்குழு ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், காஷ்மீர் படபிடிப்புக்காக தனி விமானத்தில் சென்ற வீடியோவை பகிர்ந்து உறுதிபடுத்தியுள்ளனர்.

அப்போது விமானத்தில் இருந்த அனைவரையும் விஜய் சந்தித்து கையசைத்து வரவேற்றார். மேலும் படக்குழுவினரை வீடியோ எடுத்து மகிழ்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...