நடிகர் விஜயின் 66ஆவது திரைப்படம் தொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளியாகியிருந்தது.
விஜய் 66 படத்தை வம்சி இயக்கவுள்ளார். தில்ராஜூ படத்தை தயாரிக்கவுள்ளார்.இந்த நிலையில் விஜய் 66 தொடர்பான மற்றொரு சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது.
ஒரு கல்லில் இரு மாங்காய் போல அந்த அறிவிப்பில் பல முடிச்சுக்கள் அவிண்டன. அதாவது, விஜய் 66 படத்தில் மகேஸ்பாபுவின் செல்ல மகள், சித்ரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்தன.
விஜய் 66 படத்தை இயக்கவுள்ள வம்சி, மகேஸ் பாபுவின் நெருங்கிய நண்பராவார்.
இதனால் மகேஸ் பாபுவின் மகளை விஜய் 66 படத்தில் நடிக்க வைப்பது எளிது என திரையுலக வட்டாரங்கள் பரபரப்புடன் பேசி வருகின்றன.
ஆனால் மகேஸ்பாபு தரப்பு விஜய் 66 தொடர்பான எந்தவொரு பேச்சும் தம்முடன் பேசப்படவில்லை என கூறியுள்ளது. இதேவேளை மகேஸ்பாபுவின் மகள் விரைவில் மகேஸ்பாபுடன் இணைவார் என்று, அவர்களது தரப்பு கூறியுள்ளது.
இந்த தகவல் மகேஸ்பாபு ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் தள்ளியுள்ளது.
Leave a comment