தற்கொலை முயற்சி செய்தாரா நடிகர் ரஜினிகாந்த், ஷாக்கிங் தகவல்- என்ன ஆனது?

24 6630e222bf831

தற்கொலை முயற்சி செய்தாரா நடிகர் ரஜினிகாந்த், ஷாக்கிங் தகவல்- என்ன ஆனது?

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவிற்கு ஏன் இந்திய சினிமாவிற்கே ஒரு அடையாளமாக இருக்கும் பிரபலம்.

இவர் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களை தாண்டி எல்லா மொழி ரசிகர்களும் ரசிப்பார்கள். இந்திய சினிமாவை தாண்டி இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கடைசியாக ஜெயிலர் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தவர் இப்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் இதுவரை வெளிவராத தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

அதாவது ரஜினிகாந்த் வறுமையில் இருந்தபோது ஆபிஸ் பாய், கூலி வேலை என பார்த்திருக்கிறார். அப்போது வாழ்க்கையில் மீது பிடிப்பு இல்லாமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவு செய்தாராம்.

ஆனால் சுவரில் வரையப்பட்டிருந்த ஒரு கடவுளின் முகம் அவரது எண்ணத்தை மாற்றியதாம், பிறகு அன்றைய இரச தூங்க சென்றிருக்கிறார். அப்போது கனவில் முகப்பொலிவுடன் ஒருவர் அவரை நோக்கி வந்தாராம்.

பிறகு ஆற்றின் மீது அவர் நடந்து வந்தது போலவும்; அவரை நோக்கி ரஜினிகாந்த் ஓடியதுபோலவும் கனவில் காட்சிகள் வந்திருக்கின்றன.

மறுநாள் அனைவரிடமும் இதுகுறித்து ரஜினி சொல்ல; சுவரில் வரையப்பட்டிருந்தது ராகவேந்திரர் ஓவியம் என்று கூறியிருக்கிறார்.

அதன்பின் ராகவேந்திரா கோவிலுக்கு சென்று வேண்டியிருக்கிறார் ரஜினி. அதன்பிறகே நடத்துனர் வேலை கிடைக்க பிறகு நடிகராகவும் மாறினாராம்.

Exit mobile version