srk
சினிமாபொழுதுபோக்கு

ஷாருக்கானுடன் இணையும் தென்னிந்திய பிரபலங்கள்

Share

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது ‘பதான்’ மற்றும் ’ஜவான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்தப் பக்கத்தில் இரண்டு தென்னிந்திய பிரபலங்கள் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்து வரும் ‘பதான்’ மற்றும் ’ஜவான்’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் அடுத்த கட்டமாக அவர் நடிக்கும் திரைப்படம் ஒன்றின் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் இயக்கிய சர்க்கஸ்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் ’காந்தாரா’ படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டி மற்றும் பிரபல கன்னட நடிகர் ரக்சித் ஷெட்டி ஆகிய இருவரும் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ’காந்தாரா’ திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க இருப்பதாகவும் தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் இந்த படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...