நடிகர் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
கொரோனா பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி, உடுமலைபேட்டை பகுதிகளில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலில் தற்போது முகாமிட்டுள்ளது டான் படப்பிடிப்பு குழு. இந்த படப்பிடிப்பு குழுவில், டான்ஸ் மாஸ்ரர் பிருந்தாவும் இணைந்துள்ளார். இதனால் டான் திரைப்படத்தின் பாடல் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் தாஜ்மகால் முன்பாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதேவேளை, படப்பிடிப்பு குழுவினருடன் சிவா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.
அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார் நடிகை பிரியங்கா அருள்மோகன். டாக்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து இவர் இந்த படத்தில் மீண்டும் சிவாவுடன் இணைந்துள்ளார்.
லைகா நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் இணைந்து இத் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். திரைப்படத்தை எதிர்வரும் டிசம்பரில் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment