1801554 simbu
சினிமாபொழுதுபோக்கு

சிம்பு குரலில் ‘தீ தளபதி’ – அதிர்ச்சி கொடுத்த வாரிசு

Share

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடலை கடந்த 5-ம் திகதி படக்குழு வெளியிட்டது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான ‘ரஞ்சிதமே’ பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது.

இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘தீ தளபதி’ பாடல் வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு படக்குழு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதன்படி தீ தளபதி பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 17
பொழுதுபோக்குசினிமா

பிரபாஸின் ‘பௌஜி’ படப்பிடிப்பில் விபத்து: ஊழியர் உயிரிழந்ததால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்

இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படமான ‘பௌஜி’...

world 16
பொழுதுபோக்குசினிமா

தமிழகத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி: மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி வாழ்த்து

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. முதல்முறையாகத் தேர்தல் களத்தைக்...

world 4
சினிமாபொழுதுபோக்கு

தமிழக தேர்தல் களம்: தவெக முன்னிலையில் அதிரடி – விஜய்யை நேரில் சந்தித்து த்ரிஷா வாழ்த்து!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து...

world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...