ஓடும் பஸ்ஸில் ‘ரொமான்ஸ்’ – காத்து வாக்கில ரெண்டு காதல் வீடியோ ‘அவுட்’
இயக்குநர் விக்னேஸ்வரன் இயக்கத்தில் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பு.
நானும் ரௌடி தான் வெற்றிக்குப் பிறகு நயன்தாரா, விக்னேஸ்வரன் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் கைகோர்த்துள்ளது. இவர்களுடன் இந்த படத்தில் சமந்தாவும் இணைந்துள்ளார்.
தற்போது பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு கட்சி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஓடும் பஸ்ஸின் படிக்கட்டில் சமந்தா, நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சி படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தக் காட்சி, கமலின் ‘வலையோசை கல கலவென’ பாடலின் ரீமேக்காக இருக்குமோ என தகவல்கள் கசிந்துள்ளன.
Leave a comment