சினிமா
நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பிய நெட்பிளிக்ஸ்!


நெட்பிளிக்ஸ் நிறுவனம் நயன்தாராவின் திருமண வீடியோவை ஒளிபரப்பும் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு நெட்பிளிக்ஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த திருமணத்திற்கான வீடியோ ஒளிபரப்பு உரிமையை ரூ.25 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றதாகவும் திருமணத்திற்கான ஆடம்பரச் செலவுகள் அனைத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
தற்போது அதில் திருமணத்திற்கான செலவு தொகை மற்றும் திருமண வீடியோவுக்கான செலவுத்தொகையை திருப்பி தரவேண்டுமென தெரிவித்துள்ளது.
இத்தகவல் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
#Nayanthara #vikneshsivan