17
சினிமாபொழுதுபோக்கு

நள்ளிரவில் போலீஸ் நிலையம் சென்ற ரச்சிதா!

Share

நள்ளிரவில் போலீஸ் நிலையம் சென்ற ரச்சிதா!

சரவணன் மீனாட்சி என்னும் சீரியல் மூலம் பிரபல்யமான ரச்சிதா, தினேஷும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இப்படி நிலையில் ரச்சிதா தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் திடீரென ரச்சிதா மாங்காடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் ஒன்று அளித்தார். அதில் “தனது கணவர் தினேஷை பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக தனது செல்போனுக்கு தினேஷ் ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது மற்றும் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுவதாக” புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் , தினேசை விசாரணைக்கு அழைத்திருந்தனர். இந்த நிலையில் காவல் நிலையம் வந்த தினேஷ் “ரச்சிதாவிற்கு வேண்டுமானால், விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம்” என கூறிச் சென்றுள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் ரச்சிதாவிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ரச்சிதா நள்ளிரவில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு, ஆஜராகி விட்டு சென்றிருக்கும் சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

அதுமட்டுமல்லாது பிரிந்து வாழ்ந்து வரும் கணவர் தனக்கு மிரட்டல் கொடுப்பதாக ரச்சிதா அளித்த புகார் ஆனது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. தொடர்ந்து இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...