தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே.
இவர் தற்போது தளபதி விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
இவர் தளபதியுடன் இணைந்ததைத் தொடர்ந்து தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “அதிகாலை 4 மணிக்கு எழுந்து கடுமையான உழைத்தால் ஒருநாள் விருது கிடைக்கும்” என பதிவிட்டு விருதுடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
இந்தப் புகைப்படங்களும் பதிவும் தற்போது சமூக வலைத்தளங்களிடையே படு வேகமாக வைரலாகி வருகின்றன
.
கடந்த ஆண்டு பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான தெலுங்கு படமான ‘வைகுந்தபுரமுளு’ படத்துக்கு 5 சாக்ஸி விருதுகள் கிடைத்துள்ளன.
இந்த படத்தில் நாயகனாக நடித்த அல்லு அர்ஜூன் சிறந்த நடிகராகவும், நாயகியாக நடித்த பூஜா ஹெக்டே சிறந்த நடிகையாகவும் , படத்தின் இயக்குநருக்கு சிறந்த இயக்குநர் விருதும் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் சிறந்த படத்துக்கான விருது மற்றும் சிறந்த இசையமைப்பாளர் விருது ஆகியவையும் கிடைத்துள்ளன.
இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது விருதுடன் படுக்கையில் படுத்தவாறு போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் பதிவிடப்பட்டு சில மணி நேரங்களிலேயே 6 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளன.
Leave a comment