poojahegde
சினிமாபொழுதுபோக்கு

சல்மான்கானுடன் இணையும் தளபதி நாயகி!

Share

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானுடன் பூஜா ஹெக்டே இணைந்துள்ளார்.

விஜய், அல்லு அர்ஜுன், பிரபாஸ், ,ராம் சரண் உள்ளிட்ட தென்னிந்திய நடிகர்களுடன் இணைந்து நடித்து வெற்றிப்படங்களை கொடுத்த பூஜா ஹெக்டே இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானுடன் இணைகின்றார்.

தற்போது ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக ‘சர்க்கஸ்’ படத்தில் நடித்து வருகிறார் பூஜா நடிக்கிறார். இந்த படம் கிறிஸ்மஸ் வெளியீடாக வெளிவரவுள்ளது. இதேவேளை, மகேஷ் பாபுவுக்கு ஜோடியாகவும் ‘SSMB28’ படத்தில் இணைகிறார் பூஜா.

இந்நிலையில் சல்மான் கானுடன் இணைந்துள்ளதாக பூஜா ஹெக்டே தந்தது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சல்மான் கானின் புதிய படமான ‘கபி ஈத் கபி தீபாவளி’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் ஆரம்பமாகியுள்ளது. இதில் பூஜா ஹெக்டே மற்றும் சல்மான் கான் கலந்துகொண்டனர்.

கறுப்புச் சட்டையில் எடுத்த தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ள நடிகை பூஜா ஹெக்டே, “படப்பிடிப்பு தொடங்குகிறது… 😉🎞” என சல்மானின் பிரேஸ்லெட்டை வெளிப்படுத்தியபடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

‘கபி ஈத் கபி தீபாவளி’ படத்தின் பெஸ்ட் லுக் ஸ்டில் தற்போது வெளியாகி உள்ளது. இரும்பு கம்பியுடன் பைக்கில் செல்லும் சல்மான் கான், நீண்ட முடியுடன் தோன்றியுள்ளார். கையில் பிரேஸ்லெட்டை அணிந்துள்ளார்.

இந்த திரைப்படம் இந்த ஆண்டு டிசெம்பரில் வெளியாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
download 3
பொழுதுபோக்குசினிமா

ஒஸ்கார் வரலாற்றில் புதிய உச்சம்: 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சின்னர்ஸ் உலக சாதனை!

இயக்குநர் ரியான் கூக்ளர் (Ryan Coogler) இயக்கத்தில் உருவான ‘சின்னர்ஸ்’ (Sinners) எனும் திகில் திரைப்படம்,...

26 69710ff1c7c80
பொழுதுபோக்குசினிமா

14 வயதாகியும் செல்போன் இல்லை! மகள் ஆராத்யாவை கண்டிப்புடன் வளர்க்கும் ஐஸ்வர்யா ராய்!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதியரின் மகள் ஆராத்யா பச்சன், ஒரு...

image 3 2rcm9
பொழுதுபோக்குசினிமா

அமிதாப் பச்சனின் வீட்டில் தங்கக் கழிவறை 10 கோடி ரூபாய் பெறுமதியா? வைரலாகும் புகைப்படங்கள்!

பாலிவுட்டின் ஜாம்பவான் அமிதாப் பச்சனின் மும்பை இல்லமான ‘ஜல்சா’வில் உள்ள தங்கக் கழிவறை (Golden Toilet)...

26 697099df586de
பொழுதுபோக்குசினிமா

இன்று 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் நடிகர் சந்தானம்!

சின்னத்திரையிலிருந்து தற்போது பலரும் வெள்ளித்திரையில் நடிக்க வருகிறார்கள். ஆனால், அவர்கள் யாவரும் வெற்றிக்கனியை பறிக்கிறார்களா என்பதே...