எழுத்தாளர் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாக வைத்து, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிகப்பெரும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப் படத்தின் முதல் பாகம் எதிர்வரும் செப்டம்பர் 30-ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், படத்தின் அப்டேட்டுகள் நாளுக்கு நாள் புதிய புதிய பரிமாணத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படத்துக்கான மிக்கப்பெறும் எதிர்பார்ப்பை தூண்டி வருகின்றன.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத் குமார், ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யாராய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நடிகர்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த தகவலை படத்தின் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதுவும் சும்மா இல்லை, பாடல் உருவான விதத்தை வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களின் தாக்கத்தை மேலும் தூண்டியுள்ளார்.
#Cinema
Leave a comment