மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’.
மிகப்பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான்.
தமிழ் உள்பட 5 மொழிகளில் ஜ்ருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வெளியாக உள்ளது.
படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.அண்மையில் இந்த படத்தின் டீஸர் மற்றும் பொன்னி நதி என்ற பாடல் வெளியாகி வரவேற்பு பெற்ரற நிலையில், ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பல திரைப்பட பாடல்கள் பாடிய நிலையில், அதில் ஒரு பாடலாக ’பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற பொன்னி நதி என்ற பாடலையும் பாடியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான், ஜொனிதா காந்தி, பாம்பே பாக்யா உள்ளிட்ட பலர் பாடிய இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#Cinema
Leave a comment