பீஸ்ட் திரைப்படத்தைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் ’தலைவர் 169’.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜனிகாந் நடிப்பில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் கைகோர்க்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஜூலை ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், தற்போது படத்தில் ரம்யா கிருஷ்ணனும் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
படையப்பா திரைப்படத்தில் ரஜனிக்கு சமமாக அனைவராலும் ரசித்து பார்த்த ஒரு கதாபாத்திரம் ரம்யா கிருஷ்ணனின் ‘நீலாம்பரி’ பாத்திரம். இந்த கதாபாத்திரம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
தற்போது இந்த ஜோடி மீண்டும் இணையவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார் ரம்யா கிருஷ்ணன். அநேகமாக இந்த கதாபாத்திரம் படையப்பா நீலாம்பரி போல நெக்கடிவ் கதாபாத்திரமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
படையப்பா படத்தில் இணைந்த இந்த ஜோடியை மீண்டும் திரையில் காண தவமிருந்த ரசிகர்களுக்கு ‘தலைவர் 169’ பெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
#Cinema
Leave a comment