பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அண்மையில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘புஷ்பா’ இந்த திரைப்படம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், கன்னடம். மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி ஒட்டு மொத்த ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்றைப் பெற்றதுடன் மிகப்பெரும் வசூலையும் குவித்தது.
இதேவேளை. இந்த படத்தில் இடம்பெற்ற ஐட்டம் பாடலான ’ஊ சொல்றியா மாமா ஊஊ சொல்றியா மாமா’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது. சமந்தாவின் ஐட்டம் பாடலான இந்த பாடலும் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரும் கரணம் என்று கூறலாம்.
பாடல் வெளியான நாள் முதல் தற்போது வரை ஆண்கள், பெண்கள் என அனைவர் மத்தியிலும் வைரலாகி வருகின்ற நிலையில், பாடல் ரிகர்சலின் பொது எடுக்கப்பட்ட வீடியோவை நடிகை சமந்தா தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் பாடலில் தோன்றுவதை விட சமந்தா இன்னும் கவர்ச்சியாக காணப்படுகிறார்.
சமந்தா பதிவிட்டுள்ள இந்த வீடியோ, பதிவிடப்பட்டது சிறிய நேரத்திலேயே 6 லட்சத்து 84 ஆயிரத்து 538 பார்வையாளர்களை கடந்துள்ளது. அத்துடன் சமூக வலைத்தளங்களில் மிகப்பெருமளவில் வைரலாகி வருகிறது.
#Cinema
Leave a comment