images 5
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

எண்ணெய் பசை சருமமும் முகப்பரு பிரச்சனையும்…. உங்களுக்கான தீர்வுகள் இதோ…

Share

முகம், நெற்றி, தோள்பட்டை மார்பு போன்ற பகுதிகளில் ஏராளமான எண்ணெய் சுரப்பிகள் உள்ளன, இவற்றிலிருந்து எண்ணெய் (சீபம்) சுரக்கிறது.

இவை வெளியேறும் வழியில் ஏற்படுகின்ற தடையினால் பருக்கள், கட்டிகள் வருகிறது. ஹார்மோன் மாற்றங்கள், பாக்டீரியா தொற்றினாலும் இவை ஏற்படுகின்றன.

இதற்கு சித்த மருந்துகளில், கடல் சங்கை தண்ணீரில் உரசி முகப்பரு, கட்டி உள்ள இடங்களில் பூசி வர வேண்டும். அடுத்து, ஏலாதி சூரணம் ஒரு கிராம், சங்கு பற்பம் 200 மி.கி. கலந்து காலை, மதியம், இரவு மூன்று வேளை சாப்பிட வேண்டும். இரவு தூங்கும் போது குங்குமாதி லேபம் களிம்பை முகத்தில் பூசவும்.

முகப்பருக்கள் நீங்க ஐஸ் கட்டி ஒத்திடம் கொடுக்கலாம். ஒரு சிறு ஐஸ்கட்டி எடுத்து அதை ஒரு சுத்தமான துணியில் சுற்றி முகப்பரு உள்ள இடத்தில் ஒற்றி எடுக்கலாம். இப்படி செய்வதால் முகப்பருக்களால் ஏற்படும் எரிச்சல் மற்றும் வலி குறையும்.

எலுமிச்சை சாறு எடுத்து அதனுடன் சிறிது தண்ணீர் கலந்து முகப்பருக்களின் மேல் தடவி அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவினால் முகப்பருக்கள் நீங்கும். முகத்தை அடிக்கடி தண்ணீரால் கழுவ வேண்டும். எண்ணெய் பலகாரங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள்.

#Beauty

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...