நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த மாதம் 9ம் திகதி மாமல்லபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.
இந்த திருமண நிகழ்வில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோரின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் மணிரத்னம், நடிகர் ஷாருக்கான், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, இயக்குனர் மற்றும் நடிகர் எஸ் ஜே சூர்யா, இயக்குனர் அட்லி, இசை அமைப்பாளர் அனிருத், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர், விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஆகியோரின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இது தொடர்பான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடவே, தற்போது ரசிகர்களையும் இந்த புகைப்படங்கள் வெகுவாக கவர்ந்துள்ளது.
தற்போது இந்த புகைப்படங்களை அவர்களது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
#CinemaNews
Leave a comment