லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது ’ஜவான்’ உள்பட சில படங்களில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் வேலைகளில் விக்னேஷ் சிவன் இருக்கும் நிலையில் நயன்தாரா இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாதவன் மற்றும் சித்தார்த் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் ஒன்றை அறிமுக இயக்குனர் சசிகாந்த் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில்தான் நயன்தாரா நாயகியாக நடிக்கவிருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மாதவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவருமே சுமார் 20 வருடங்கள் திரையுலகில் இருந்தாலும் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கடந்த 2004ஆம் ஆண்டு சித்தார்த் மற்றும் மாதவன் இணைந்து ’ஆயுத எழுத்து’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் தற்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Cinema
Leave a comment