தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பாலும், அழகாலும் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகை நதியா.
1986ஆம் ஆண்டு வெளியாகிய ’பூவே பூச்சூடவா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை நதியா, ரஜினிகாந்த், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, சிவகுமார் உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்தவர்.
திருமணத்துக்கு பின்னர் திரைத்துறையிலிருந்து விலகியிருந்த இவர், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆனார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ,ஒளி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இன்ற வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள நதியா சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கிறார். தற்போது நதியாவுக்கு 55 வயதாகும் நிலையில் அவர் ஜிம்மில் வேர்க்ர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இளம் நாயகிகளுக்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதுடன் லைக்குகளை குவித்து வருகிறது.
#Cinema
Leave a comment