#வைகைப்புயல் #வடிவேலு நடிப்பில் உருவாகி வருகிறது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு வைகைப்புயல் நடிப்பில் வெளிவரவுள்ள இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்த நிலையில், வைகைப்புயல் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக வெளியாகியுள்ளது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் போஸ்டர்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றைய தினம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சில நாய்களுடன் வடிவேலு காணப்படும் போஸ்டர் படக்குழுவால் வெயிடப்பட்டள்ளது.
இந்த போஸ்டர் வைகைப்புயல் ரசிகர்களால் சமூக வலைத்தள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில் வைரலாகி வருகிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். படத்துக்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன்.
படத்தில் வடிவேலு தொடர்பான காட்சிகள் படப்பிடிப்பில் முதல்நாளில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போது படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ள குறித்த போஸ்டர் வைரலாகியுள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெள்ளித்திரையில் வைகைப்புயல் தரிசனத்துக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு படக்குழுவினர் விருந்து படைத்துள்ளனர்.
#Cinema
Leave a comment