மில்க் புட்டிங்

milk pudding

தேவையான பொருட்கள்

முட்டை – 3
பால் – 1 கப்
சர்க்கரை – 5 ஸ்பூன்
ஏலக்காய்பொடி – சிறிதளவு
பாதாம், பிஸ்தா – 10 கிராம்

செய்முறை

பிஸ்தா, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும். சர்க்கரையை பொடி செய்து கொள்ளவும்.

பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்து கொள்ளவும். முட்டையை நன்கு கலங்கி கொள்ளவும்.

ஆறவைத்த பாலை முட்டையில் ஊற்றி நன்றாக கலக்கிக்கொள்ளவும்.

அதன்பின் அதில் பொடி செய்ய சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

அடுத்து அதில் சிறிது ஏலக்காய் பொடியை சேர்த்து அதனை வேறு ஒரு கிண்ணத்தில் மாற்றி இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி அதன்மேல் ஸ்டாண்ட் போல வைத்து அதன்மேல் கிண்ணத்தை வைக்கவும்.

அதனை மூடி 15 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஆவியில் வேக வைக்கவும். அடுத்து சூடு ஆறியதும் இறக்கி அதில் பிஸ்தா, பாதாமை தூவி 1 மணிநேரம் பிரிட்ஜில் வைத்து பிறகு சாப்பிடவும்.

இப்போது சூப்பரான மில்க் புட்டிங் ரெடி.

#LifeStyle

Exit mobile version