facepacks 1659713351
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

மழைக்காலத்தில் சரும அழகை பேண…..

Share

இயற்கை பொருட்கள் பாதுகாப்பானவை, எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாததால், அனைத்து வயதினரும் சற்றும் அச்சம் கொள்ளாமல் பயன்படுத்தலாம். மழைக்காலத்தில் குறைபாடற்ற அழகான சருமத்தைப் பெற உதவும் சில இயற்கை பேஸ் பேக்குகள் உங்களுக்காக

 

1 oats face pack 23 1514027299 1659713455
* முதலில் ஒரு பௌலில் ரோஸ் வாட்டர் சிறிது எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் சிறிது ஆரஞ்சு தோல் பவுடர், துவரம் பருப்பு பவுடர் மற்றும் ஓட்ஸ் பவுடரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.

* இறுதியாக குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

2 tomato 1659713464

உங்கள் முகத்தில் குழிகள் அதிகம் உள்ளதா? அப்படியானால் திறந்துள்ள சருமத் துளைகளை சுருக்குவதற்கு ஒரு அற்புதமான ஃபேஸ் பேக் உள்ளது.

* தக்காளியை துண்டுகளாக்கி ஃப்ரிட்ஜில் உள்ள ப்ரீசரில் வைக்க வேண்டும்.

* பின் அந்த உறைய வைக்கப்பட்ட தக்காளி துண்டுகளால் தினமும் சருமத்தை மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

* இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

3 facepack 1659713476

உங்கள் சருமத்தை மென்மையாக்க விரும்பினால் இந்த ஃபேஸ் பேக் பெரிதும் உதவியாக இருக்கும்.

* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும். * பின் அதில் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ரோஸ் வாட்டர் சேர்த்து கெட்டியாக பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* அதன் பின் அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.

* இறுதியாக வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...