கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக மாறியவர் லட்சுமி மேனன்.
சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் இதுவரை நடித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி ஜோடியாக றெக்க படத்தில் நடித்த பின்னர், மீண்டும் படிப்பை தொடர்ந்தார்.
இதன்பின்னர் படங்களில் நடிப்பதில் பின்னடிப்பை காட்டினார்.
புலிக்குத்தி பாண்டி என்ற படத்தில் சில வருடங்களுக்கு முன்னர் தலைகாட்டினார். இந்நிலையில் ‘ஏஜிபி‘ என்ற படத்தில் தற்போது நடிக்கிறார்.
திகில் கதையம்சம் உள்ள படமாக இந்தப் படம் தயாராகிறது.
வணிக ரீதியிலான படங்களில் நடித்த லட்சுமி மேனன் முதல் தடவையாக இந்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சவாலான மனநோயாளி கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு பெண்ணுக்குள் மூன்று கதாபாத்திரங்கள் நுழைந்து பாதிப்புக்கு உள்ளாக்கும் கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை ரமேஷ் சுப்பிரமணியன் இயக்குகிறார்.
Leave a comment