ஜோதிகா கதாபாத்திரத்தில் கங்கனா

ezgif 5 c69bb180ab

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

மேலும், வடிவேலு, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘சந்திரமுகி 2’-ல் ஜோதிகா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துவந்ததையடுத்து பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#cinema

 

Exit mobile version