ki
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

கமகமக்கும் யாழ்ப்பாணத்து மீன் குழம்பு! எப்படி செய்யலாம்?

Share

கமகமக்கும் யாழ்ப்பாணத்து மீன் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • வெட்டிக் கழுவிய மீன் துண்டுகள் – 500 கிராம்
  • உரித்து, கழுவி, வெட்டிய சிறிய வெங்காயம் – 100 கிராம்
  • கழுவி, வெட்டிய பச்சை மிளகாய் – 4
  • யாழ்ப்பாணத்துத் தூள் – காரத்துக்குத் தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • பழப்புளிக் கரைசல் – 1 கப்
  • தேங்காய்ப்பால் – முதற்பால் 1 கப் – 2 ம் 3ம் பால் ஒவ்வொரு கப்

செய்யும் முறை

  • ஒரு மண் சட்டியில் கழுவிய மீன் துண்டுகள், வெட்டிய சிறிய வெங்காயம் , பச்சை மிளகாய் போன்றவற்றைப் போடவும். சிலர் கருவேப்பிலையும் போடுவார்கள்.
  • பழப்புளிக் கரைசல், தேங்காய்ப் பால், தேவையான அளவு உப்பு, யாழ்ப்பாணத்து மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  • சேர்த்த கலவையை நன்றாகக் கலக்கவும். மண் சட்டியை அடுப்பில் மிதமான சூட்டில் வைக்கவும். அதிகம் நெருப்பும் தேவைப்படுவதில்லை.
  • குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் பிறந்து வரும்போது நற்சீரகம், மிளகு, உள்ளி ஆகியவற்றை இடித்துப் போடுவார்கள். இதனால் குழம்பு நன்றாக மணக்கும்.
  • பொதுவாக இவ்வாறே மீன் குழம்பு வைத்தாலும், இடத்துக்கு இடம் சில சில வேறுபாடுகளைக் காணமுடியும்.
  • மதிய நேரத்திற்கு பிரதான கறியாக மீன் குழம்பு பயன்படுத்தப்படுவதுடன், இரவு தயாரிக்கப்படும் புட்டுக்கும் பொருத்தமான கறியாக மீன் குழம்பு இருக்கும்.
  • முன்னரெல்லாம் அடுத்த நாள் காலையில் பழஞ்சோற்றுடனும் உண்ணப்படும் கறியாக மீன் குழம்பு பயன்படுத்தப்படும்.
  • மீன் கறி, மீன் குழம்பு போன்ற உணவுகளுக்கு ஒடியல் புட்டு மிகப் பொருத்தமானதாக இருக்கும்

#FoodRecipes

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...