ezgif 1 246c54b024
சினிமாபொழுதுபோக்கு

முன்னணி நடிகைகளுடன் கைகோர்த்த ஜெயம் ரவி!

Share

ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி நடித்த ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதும் இதனை அடுத்து அவர் தற்போது ’அகிலன்’ ’இறைவன்’ மற்றும் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி படம் ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஜெயம் ரவி இயக்கத்தில் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஒரு படம் உருவாகயிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ezgif 1 385301ef86

‘சைரன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகிய இரண்டு முன்னணி நாயகிகள் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் யோகிபாபு, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கின்றனர்.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்காலில் நடைபெற்று வருவதாகவும் அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப் போவதாகவும் நவம்பர் 17 வரை முதல்கட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி கைதியாகவும், கீர்த்தி சுரேஷ் போலீஸ் கேரக்டரிலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...