1847147 ponn2
சினிமாபொழுதுபோக்கு

திரிஷா குந்தவை ஆனது எப்படி? வீடியோ வெளியிட்ட படக்குழு

Share

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதால் பொன்னியின் செல்வன் 2 ரிலீசை அக்டோபர் மாதத்துக்கு தள்ளி வைக்க முடிவு செய்து இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதனை படக்குழுவினர் மறுத்து திட்டமிட்டபடி ஏப்ரல் 28-ந்தேதி தேதி வெளியாவது உறுதி என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரிஷாவின் தோற்றம் வடிவமைக்கப்பட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், “கூர்மையான நாக்கு. திடமான மனம். பவர்ஹவுஸ்! எங்கள் நித்திய அழகை நீங்கள் காண ஆவலுடன் காத்திருக்கிறீர்களா? படத்திற்கு பின்னால் திரிஷா குந்தவையாக மாறியது எப்படி என்பதைப் பாருங்கள். விரைவில் முதல் சிங்கிள் வெளியாகும். காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளனர்.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...