hair
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

கூந்தல் உதிர்வு, இளநரை பிரச்சனையை தீர்க்க வீட்டிலேயே தயாரிக்கலாம் எண்ணெய்

Share

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய் – 500 மி

நல்லெண்ணெய் – 100 மி

கரிசலாங்கண்ணி இலைகள் – 2 கைப்பிடி

அரைக்க வேண்டியவை

சின்ன வெங்காயம் – 20

செம்பருத்தி இலை – 2 கைப்பிடி

கறிவேப்பிலை – 2 கைப்பிடி

கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்

மருதாணி – 1 கைப்பிடி

நெல்லிக்காய் – 10

வெந்தயம் – 2 ஸ்பூன்

கற்றாழை – 2 இதழ்

செய்முறை

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து 3 எண்ணெயை ஊற்றி மிதமாக சூடானதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்.

அடிபிடிக்காமல் இருக்க பொறுமையாக சிறிது நேர இடைவெளியில் கிளறிக் கொண்டே இருக்கவும். நுரை அடங்கும் வரை காய வைத்து இறக்கி ஆற விடவும்.

இப்போது எண்ணெய் நன்கு கரும்பச்சை நிறத்தில் இருக்கும். இதனை பாட்டிலில் சேகரித்து தினமும் பயன்படுத்தி வர கூந்தல் நன்கு வளர்ந்து இளநரை உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்.

சளி பிடிக்கும் பிரச்சனை இருப்பவர்கள் கற்றாழை பயன்படுத்துவதை தவிர்த்து விடவும்.

#LifeStyle

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...