hansika wed
சினிமாபொழுதுபோக்கு

ஓடிடியில் வெளியாகிறது ஹன்சிகா திருமணம்

Share

நயன்தாராவின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அவருடைய திருமணம் நடந்து கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் அந்த வீடியோ ஒளிபரப்பாகவில்லை. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் ஹன்சிகாவின் திருமணம் நடந்த நிலையில் அவருடைய திருமண வீடியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ஹன்சிகாவுக்கு சோஹைல் கதுரியா என்பவருடன் கடந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி ஜெய்ப்பூரில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரமுகர்கள் வந்திருந்தனர்.

இந்த நிலையில் ஹன்சிகாவின் திருமண வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை ஹாட்ஸ்டார் பெற்றிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதுகுறித்த ட்ரெய்லர் வெளியான நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி பிப்ரவரி 10ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் ஹன்சிகாவின் திருமண வீடியோ வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஹன்சிகா தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#cinema

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...