1801505 han
சினிமாபொழுதுபோக்கு

திருமண கோலத்தில் ஹன்சிகா – திருமண கொண்டாட்டம் ஆரம்பம்

Share

தமிழில் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

பிரான்சில் ஈபிள் டவர் முன்னால் நின்று சோகைல் கதுரியா தன்னிடம் காதலை வெளிப்படுத்தும் புகைப்படத்தையும் ஹன்சிகா பகிர்ந்து இருந்தார். இவர்கள் திருமணம், 450 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் நாளை (டிசம்பர்) 4ம் திகதி நடக்க உள்ளது.

இதனையொட்டி 3 நாட்களாக கோலாகலமாக ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமண நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றன. வியாழனன்று நடைபெற்ற மெஹந்தி ஃபங்ஷன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தின. மருதாணி சிவந்த கையுடன் ஹன்சிகா அழகாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகின.

இதைத்தொடர்ந்து இவருடைய திருமண சடங்குகள் தற்போது துவங்கி உள்ள நிலையில், இவர்களுடைய திருமண கொண்டாட்டம் சுபி இசை கச்சேரியுடன் தொடங்கியுள்ளது. ஹன்சிகா மணமகள் கோலத்தில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஹன்சிகா மணமகள் உடையில் சோஹைல் கதுரியாவுடன் நடந்து வருகிறார்.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
37 1
சினிமா

இலங்கை தெருவில் நடந்து சென்ற சந்தோஷ் நாராயணன்.. ஒரு நபர் வந்து சொன்னதை கேட்டு ஷாக்

தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். சமீபத்தில் சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு...

36 1
சினிமா

ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை நான் ஆனால்.. பாடகி கெனிஷா சொன்ன ரகசியம்

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரிய...

35 3
சினிமா

ஷாருக்கான் அணிந்திருக்கும் இந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா!

பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் அழைக்கப்பட்டு கொண்டாடப்படுவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடைசியாக பதான்,...

34 3
சினிமா

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

காவிய அந்தஸ்தைப் பெற்ற காதல் படங்களில் ஒன்றாக 7ஜி ரெயின்போ காலணி படம் இப்போதும் ரசிகர்களால்...