நடிகை சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி இருந்ததமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் கொச்சி காக்கநாடு பகுதியைச் சேர்ந்த நடிகை சூரிய தாரா பல மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வரும்போது, எரூர் பகுதியில் உள்ள கடையொன்றில் நடிகை சூரிய தாரா தோசை மா வாங்கி வாங்கிக்கொண்டு வீடு சென்றுள்ளார்.
பின்னர் அவரது குடும்பத்தினர் அனைவரும் தோசை சுட்டு சாப்பிட்ட போது நடிகை சூரிய தாரா சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி கிடந்துள்ளது.
இதனையடுத்து இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள குறித்த நடிகை, இந்த தோசையை குழந்தைகள் சாப்பிட்டிருந்தால் உடல் நலனுக்கு பிரச்சினை ஏற்பட்டு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
#CinemaNews
Leave a comment