ஒட்டுமொத்த சமூகவலைத்தள பக்கங்களையும் ஆக்கிரமித்துள்ளது பீஸ்ட் திரைப்பட பாடலின் ப்ரோமோ.
தளபதி விஜய் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக தயாராகி வருகிறது பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
படம் ஏப்ரல் மாதம் வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நாளுக்கு நாள் படக்குழுவினரால் வெளியிடப்படும் அப்டேட்டுகள் சமூக வலைத்தள பக்கங்களை ஆக்கிரமித்து வருகின்றமை அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் ரசிகர்களின் பசிக்கு தீனி போடும் விதமாக வெளி வந்துள்ளது பீஸ்ட் திரைப்பட பாடலின் ப்ரோமோ. இன்றி மலை 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது.
காலை முதல் முதல் தவம்கிடந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது ப்ரோமா.
படத்தின் இயக்குநர் நெல்சன் தனக்குரிய ஸ்டைலில் பாடலின் ப்ரோமைவை வெளியிட்டுள்ளார். ப்ரோமோவில் அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் ஆகியோர் புதிய கெட்டப்பில் தோன்றுகின்றனர். அதுமட்டுமல்ல தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விஜய்யின் குரலும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.
ப்ரமோவில் தளபதி விஜய் நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோரை கலாய்க்கும் விதமாக அமைத்துள்ள குரல் பதிவுகள் ப்ரோமோவை மேலும் மேலும் பார்க்கத் தூண்டுகின்றன.
‘அரபிக் குத்து’ என ஆரம்பிக்கும் இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதுகிறார். பாடல் பெப்ரவரி 14 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மிகவும் கலகலப்பாகவும் நகைச்சுவையாகவும் வெளியாகியுள்ள இந்த ப்ரோமோ தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் தீயாய் பரவிவருகிறது.
#cinema
                                                                                                                                                
                                                                                                    
                    
                            
                                
				            
				            
				            
				            
 
			        
 
			        
 
			        
 
			        
Leave a comment