பிரபல பாடகர் கேகே என்றழைக்கப்படும் கிருஷ்ணகுமார் மாரடைப்பால் திடீர் மரணமடைந்துள்ளார். இவரின் திடீர் மறைவு திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாலிவூட் திரையுலகில் ஏராளமான வெற்றிப் பாடல்களை பாடி, முன்னணி பாடகராக திகைத்த கேகேவை, தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இசைப்புயல் ஏஆர் ரஹ்மானையே சாரும்.
தமிழ் உள்பட 11 இந்திய மொழிகளில் ஏறத்தாழ 6 ஆயிரம் பாடல்களை பாடியவர் கேகே. கிருஷ்ணகுமார்.
’காதல் தேசம்’ திரைப்படத்தில் ’கல்லூரி சாலை’ என்ற பாடலின் மூலம் தமிழில் அறிமுகமாந கேகே, அதன் பின் ’மின்சார கண்ணா’ ’விஐபி’ ‘தூள்’ ’சாமி’ ’கில்லி’ உள்பட பல திரைப்படங்களில் பாடினார்.
‘கில்லி’ படத்தில் இவர் பாடிய ’அப்படி போடு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
கொல்கத்தாவில் கல்லூரி விழா ஒன்றில்பங்கேற்க சென்ற கேகே, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தான் தங்கியிருந்த அறைக்கு சென்றபோது திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கேகே மறைவிற்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
#CinemaNews
Leave a comment