alia ranbeer
சினிமாபொழுதுபோக்கு

திருமணத்தில் இணைகிறது பிரபல காதல் ஜோடி!

Share

பாலிவூட் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட்.

பாலிவூட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான இவர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். இந்த தகவலை ஆலியா பட் உறவினர் ராபின் பட் உறுதிப்படுத்தியுள்ளார்.

எதிர்வரும் 13 ஆம் திகதி திருமண சடங்குகள் ஆரம்பமாகும். தொடர்ந்து 14 ஆம் திகதி திருமணம் நடைபெறும். தொடர்ந்து 16 ஆம் திகதி வரை திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு பாலிவூட் பிரபலங்கள் உட்பட 450 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமணம் செம்பூர் ஆர்.கே.பங்களாவில் நடைபெறவுள்ளது. இது ரன்பீர் கபூர் பெற்றோரான ரிஷி கபூர்-நீது கபூருக்கு திருமணம் நடந்த பங்களா என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்தை முடித்துக்கொண்டு இந்த ஜோடி தேனிலவுக்கு தென்னாபிரிக்கா பறக்க திட்டமிட்டுள்ளது என தகவல்கள் கசிந்துள்ளன.

alia ranbir

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...