1779570 pedicure at home naturally
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

வீட்டிலேயே எளிய முறையில் பெடிக்யூர்

Share

வாரத்திற்கு ஒரு முறை பாதத்தை சுத்தம் செய்யும் செயலான பெடிக்யூரை செய்து வந்தால், பாதங்களில் உள்ள அழுக்குகள் சேர்வது மற்றும் தொற்றுகள் ஏற்படுவது போன்றவை தடுக்கப்படும்.

நம் வீட்டிலேயே பாதங்களை சுத்தம் செய்யும் முறையைப் பின்பற்றுங்கள். அதுவே சிறந்த பெடிக்யூர் சிகிச்சையாக விளங்கும். சரி, இப்போது வீட்டிலேயே பாதங்களுக்கு பெடிக்யூரை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பால் – 4 கப்
பேக்கிங் சோடா – 3 டேபிள் ஸ்பூன்

முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வெதுவெதுப்பான நிலையில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

பாதங்களை வைக்கக்கூடிய அளவில் ஒரு டப் எடுத்துக்கொள்ளவும். கணுக்கால் வரை மூழ்கும் அளவுக்கு அதில் வெதுவெதுப்பான தண்ணீர் நிரப்பவும். அதில் சிறிது குளியல் உப்பு சேர்க்கவும். நீங்கள் விரும்பும் எசன்ஷியல் ஆயில் சில துளிகள் சேர்க்கலாம்.

பாதங்களை இந்த தண்ணீரில் 15-20 நிமிடங்கள் வரை ஊறவைத்து நன்கு கழுவ வேண்டும். பின்பு ஒரு அகன்ற பாத்திரம் அல்லது பாதங்களை ஊற வைக்கும் வகையிலான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, அதில் வெதுவெதுப்பான பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் அந்த பாலுடன் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் பாதங்களை 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் ஸ்கரப்பர் கொண்டு பாதங்களை தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இறுதியில் துணியால் பாதங்களை துடைத்துவிட்டு, பாதங்களுக்கு எண்ணெய் அல்லது மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவ வேண்டும்.

இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், பாதங்களில் வெடிப்புக்கள், வறட்சி போன்றவை ஏற்படுவது தடுக்கப்பட்டு, பாதங்களின் அழகும், மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.

#LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...