நடிகர் சதீஷ் மற்றும் பவித்ரா லட்சுமி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘நாய்சேகர்’ .
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் டீசர் உள்பட புரமோஷன் பணிகள் உட்பட இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் படத்தில் செல்லப்பிராணியாக நடித்த நாய்க்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார் பிரபல நடிகர். அவருக்கு நன்றி தெரிவித்து ருவிட் ஒன்றை பதிவுசெய்துள்ளார் படத்தின் நாயகன் சதீஷ்.
இவரது ருவிட்டர் பதிவில்,” படத்தில் செல்லப்பிராணிக்கு குரல் வடிவம் கொடுத்த நடிகர் சிவாவுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த ருவிற்றர் பதிவுடன் நடக்கற சிவாவுடன் தன இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சதீஷ் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை கிஷோர் ராக்குமார் இயக்கி உள்ளார். படத்தில் நாயகனாக சதீஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பவித்ரா லட்சுமி நடித்து வரும் இந்த படத்தில் ஜார்ஜ் மரியான், லிவிங்ஸ்டன், இளவரசு, ஞானசம்பந்தன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Cinema
Leave a comment